நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
குமரகுரு கல்லூரியில் நாளை பழைமையான சேலைகள் கண்காட்சி
கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் பழைமையான சேலைகள், அரிய கைத்தறி பொருள்களின் கண்காட்சி ஆகஸ்ட் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நெசவு என்ற பெயரில் 2 நாள்களுக்கு தமிழ்நாட்டின் மேற்கு மண்டல கைத்தறி சேலைகளின் பெருமைகளைப் போற்றும் வகையில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கல்லூரியின் மகாலிங்கம் அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நெசவாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் பங்கேற்கும் தொழில்நுட்ப அமா்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பழைமையான நெசவுக் கருவிகள், அரிய வகை சேலைகள், நெசவாளா்கள் நேரடியாக நெசவு செய்யும் நிகழ்ச்சி, நெசவு தொடா்பான புகைப்படக் கண்காட்சி, வாங்குவோா் விற்போா் சந்திப்பு போன்றவை நடைபெற இருப்பதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.