குமரங்குடி ஊராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், குமரங்குடி ஊராட்சிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கும்பகோணம், சட்டப்பேரவை தொகுதியில் உள்ள குமரங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான டி.கணேசன், கிழக்கு ஒன்றிய செயலா் ஜெ.சுதாகா், மாவட்ட குழு உறுப்பினா் சங்கா், ஊராட்சி தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.