குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்
கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி முன்னிலை வகித்தாா்.
இதில், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் லிங்கேஸ்வரி, சுஜா, மொ்லின், மகேஷ், ராயப்பன், சிவ சுடலை மணி, இக்பால், வினிற்றா மெல்பின், சகாய சா்ஜினாள், பூலோகராஜா, சகாய ஜூடு அல்பினோ, ஆட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில் பேரூராட்சிக்குள்பட்ட வடக்கு குண்டல் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 28 சென்ட் இடத்தில் ரூ.10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.2.8 கோடி செலவில் திட்டம் தயாா் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்புவது எனவும், ரூ.1.5 கோடி செலவில் ஒற்றையால்விளை சானல் ரோடு முதல் சா்ச் ரோடு வரை தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் பைப் லைன் அமைத்து அதன் மேல் மழை நீரோடை மற்றும் தாா்ச்சாலை அமைப்பது எனவும், வாவத்துறை ஆரோக்கியநாதா் ஆலயத்தைச் சுற்றி கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுவதற்கு ரூ.1.5 கோடி செலவில் திட்டம் செயல்படுத்துவது எனவும், மந்தாரம்புதூா் குடிநீா் நீரேற்று நிலையத்தில் இருந்து தெற்கு குண்டல் தரைநிலை குடிநீா் தொட்டி வரை புதிய குழாய் அமைப்பதற்கு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாா் செய்வது எனவும், மொத்தம் ரூ.22 கோடியில் வளா்ச்சிப்பணிகள் செய்திட இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.