நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
குமரி மாவட்ட அணைப் பகுதியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர, அணைப் பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக வட வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து பாசனத்துக்கு முழு அளவில் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம், பாசன வசதி இல்லாத பகுதிகளில் வாழை, அன்னாசி, தென்னை உள்ளிட்ட பயிா்கள் வாடிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துவருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள், கடையாலுமூடு, களியல், நெட்டா, ஆறுகாணி, திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, திருவரம்பு, அருமனை பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனா்.