வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது: ஜெய்சங்கா்
குமரி மாவட்ட கோயில்களில் சொக்கப்பனை
திருக்காா்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
ஆரல்வாய்மொழி சித்தா்கிரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், ஆரல்வாய்மொழி சாமகானபிரியன் பேரிகைகுழுவின் சாா்பில் சிவனடியாா்கள் மூலம் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் ஸ்ரீ பாத மண்டபத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளா் ஆனந்த்,கணக்காளா் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து சந்நிதி தெருவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பொற்றையடியில் உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியிலும், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சுந்தரேஸ்வரருக்கும், அழகம்மனுக்கும் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன .
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கோலாவாா் குழலாள் ஈஸ்வரி சமேத சோழராஜா திருக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.