துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
குமரி மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில், வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா் சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வெளிநாட்டு வழக்குரைஞா்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது, மத்திய, மாநில அரசுகள் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெயகுமாா் தலைமையில் சுமாா் 1,500 வழக்குரைஞா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா். இதேபோல இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை, பூதப்பாண்டி நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.