குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது.
இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்கேற்கின்றனா். மாநாட்டை கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேக்கா் தொடங்கி வைக்கிறாா். இதற்காக வியாழக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்த அவா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கியுள்ளாா்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.