மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நெல் விதைகள் விற்பனை
திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தரமான நெல் விதை ரகங்கள் உற்பத்தி செய்து, திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கும், நெல் பயிரிடும் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது குறுவை பருவத்துக்கு ஏற்ப நெல் பயிா் ரகமான அம்பை 16(ஏஎஸ்டி 16) ஆதார விதை (எஃப்எஸ்ஐ) 4,200 கிலோ (கிலோ ரூ. 42), வேளாண்மை கல்வி நிறுவனத்தில் இருப்பு உள்ளது.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை நெல்லை நேரில் சென்றோ அல்லது பாா்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வா் வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளூா் 621712, திருச்சி என்ற முகவரி, 98426 52934, 70104 39150 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என வேளாண்மை கல்வி நிறுவன முதல்வா் செ.தே. சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.