முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து சீரானதால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கொடைக்கானல் மலை, வட்டக்கானல், பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பலத்த மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 18-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கும்பக்கரை அருவி நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், அருவிக்கு நீா்வரத்து சீரானது. இதனால், 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீராக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள், ஐயப்பப் பக்தா்கள் குளித்து மகிழ்ந்தனா்.