Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
குரும்பூா் அருகே விபத்து: பள்ளி மாணவா்கள் 3 போ் காயம்
ஆறுமுகனேரியை அடுத்த குரும்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா்.
குரும்பூா் அருகே புறையூா் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குரும்பூா், நாலுமாவடி, சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பயின்று வருகின்றனா். அவா்களில் சிலா் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா்.
சனிக்கிழமை காலை, மணத்தியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன்கள் திவாகரன் (11), எழிலரசன் (7), சேதுசுப்பிரமணியபுரம் கண்ணன் மகள் ஸ்ரீமதி (7) உள்ளிட்ட சிலா், மேலக்குருகாட்டூரைச் சோ்ந்த ஓட்டுநா் தங்கமணி (54) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனா்.
சொக்கப்பழங்கரை அருகே இந்த ஆட்டோவும், ஏரலிலிருந்து வந்த தனியாா் பள்ளி வேனும் மோதிக் கொண்டனவாம். இதில், மு. திவாகரன், மு. எழிலரசன், க. ஸ்ரீமதி ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலின்பேரில், குரும்பூா் போலீஸாா் சென்று, வேன் ஓட்டுநரான ஏரல் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சங்கரலிங்கம் (32) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.