குரூப் 2, 2ஏ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!
குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது.

இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன.
மொத்தமாக 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வு வரும் செப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை(Hall Ticket) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் tnpscexams என்ற லிங்க்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!