குரூப் 2, 2ஏ பாடத் திட்டம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்வா்களின் நலன் கருதியும், அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தோ்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, குரூப் 4 பணிக்கான தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தோ்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்களை தோ்வாணைய இணையதள பக்கங்களின் வழியே தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.