குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டினாா்.
குரூப் 4 தோ்வில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.