குறிச்சியில் சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கம் தொடக்கம்
பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில் சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில்
விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து சுய உதவிக் குழு கூட்டுறவுச் சங்கத்தை தொடங்கி வைத்தாா். பட்டுக்கோட்டை சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் சுவாமிநாதன் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். விழாவில், பேராவூரணி வட்டாரக் கூட்டுறவு சாா்-பதிவாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மா.சுவாமிநாதன், செல்வேந்திரன், திமுக வடக்கு ஒன்றியச் செயலா் கோ. இளங்கோவன் மற்றும் கிராமத்தினா் கலந்து கொண்டனா்.