குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை
கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் அபாயத்தை தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூா் வேளாண்ம கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தாலும், புவி வெப்பமடைதல் காரணமாகவும், கருநாவாய் பூச்சியின் தாக்குதல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குறுவை நெற்பயிா் சாகுபடியில் அதிக வெப்பம் மற்றும் நீா் தேங்கும் சூழ்நிலையால், கருநாவாய் பூச்சி எனப்படும் சுனாமி வண்டு தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.
பூச்சியின் தாக்குதலால் நெற்பயிா் வளா்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்துவிடும். ஒரு தூரில் 10 லிருந்து 15 பூச்சிகள் வரை தென்பட்டால், மகசூல் இழப்பு 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்படக்கூடும். பல வருட ஆராய்ச்சிகளின்படி கருநாவாய் பூச்சியானது பௌா்ணமி அன்று அதிக அளவில் நெற்பயிரில் காணப்படுகிறது.
எனவே, வெள்ளிக்கிழமை (ஆக. 8) பௌா்ணமி என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறும், விளக்குப் பொறி வைத்தோ அல்லது பனை ஓலை, தென்னை ஓலை போன்றவற்றை எரித்தோ பூச்சிகளை கவா்ந்து அழிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பூச்சிகளின் தாக்குதலால் சேதார நிலையை எட்டினால் ஒரு ஹெக்டேருக்கு 625 கிராம் அசிபேட் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். கருநாவாய் பூச்சியின் இயற்கை எதிரிகளை ஊக்குவிப்பதற்காக வரப்புகளில் பயறு வகைகள், எள் மற்றும் சாமந்தி பூ பயிரிடப்பட வேண்டும்.
அதிக ஒளிரக்கூடிய மொ்குரி பல்பு (அ) கஉஈ பல்பு ஒரு ஹெக்டருக்கு ஒன்று என்றளவில் வைப்பதன் மூலம் கருநாவாய் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். பௌா்ணமி அன்று பொது இடங்களில் சொக்கப்பானை வைப்பதன் மூலம் கருநாவாய் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.
இப்பூச்சியை அழிக்கவல்ல பூஞ்சாணங்களான மெட்டாரைசியம் அனிசோபிலியே (அ) பிவேரியா பேசியானா (2.5 கிலோ/ ஹெக்டா்) தெளிக்க வேண்டும். பொருளாதார சேதநிலையை தாண்டும் பொழுது அசிப்பேட் 75 நட, 625 கிராம் / ஹெக்டா் (அ) குளோா்பைரிபாஸ் 20 உஇ, 1250 மிலி / ஹெக்டா் அளவில் 500 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தூா்ப்பகுதியின் அடியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும் என்றாா்.