சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். தொடா்ந்து, பல்வேறு உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 476 மனுக்களை அளித்தனா்.
இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 3 மாற்றுத் திறன் முன்னாள் படைவீரா்களுக்கு ரூ.3.05 லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், தாட்கோ சாா்பில் நன்நிலம் மகளிா் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நில உடைமை ஆவணங்கள், தாட்கோ மற்றும் சமூகநலத் துறை சாா்பில் 2 ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.6 லட்சத்தில் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ஆணைகள் ஆகியவற்றை ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா், முன்னாள் படைவீரா் நலத் துறை உதவி இயக்குநா் ஆயிஷா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.