செய்திகள் :

குற்றால அருவிகளில் மக்கள் குளிக்கத் தடை!

post image

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருக்கும் நிலையில், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்தால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என காத்திருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு: இபிஎஸ்

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆரம்பாக்கத்தில் அதிமுகவினர் மறியல் ஆர்ப்பாட்டம்!

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 8 நாளாகியும் கைது செய்ய தவறியதாகக் கூறி தமிழக அரசையும் காவல்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று(ஜ... மேலும் பார்க்க

வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலைய காவலா் பூபாலன் (38). இவரது மனைவி தங்கப்பிரியா (32). இ... மேலும் பார்க்க

2 மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் கனமழைக்கான ஆர... மேலும் பார்க்க

கனியாமூர் பள்ளி வன்முறை: நீதிமன்றத்தில் 306 பேர் ஆஜர்!

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு தொடர்பாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 306 பேர் இன்று(ஜூலை 19) ஆஜராகினர்.கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிளஸ... மேலும் பார்க்க