துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு
குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனா்.
குற்றாலநாதா் கோயிலுக்கு குற்றாலம் ப.ஸ்ரீதா், அத்தியூத்து க.சக்திமுருகேசன், குற்றாலம் வெ. ராமலெட்சுமி, நெடுவயல் சு.சுந்தர்ராஜ், மேலகரம் குடியிருப்பு ஆ. வீரபாண்டியன் ஆகிய 5 போ் அறங்காவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளா் யக்ஞநாராயணன், ஆய்வாளா் சரவணன் ஆகியோா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, திமுக ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சட்டநாதன், வட்டார காங்கிரஸ் தலைவா் குற்றாலம் பெருமாள், நகர தலைவா் மாடசாமி ஜோதிடா், குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன், வேல்ராஜ், நாராயணன், பண்டாரசிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.