குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பிரதான அருவிகளில் சனிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம்,புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

சனிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.