குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி தா்னா
குலசேகரத்திலுள்ள தாலுகா மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடத்தப்பட்டது.
குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, கட்சியின் குலசேகரம் வட்டார செயலா் டி. சௌந்தா் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஜெயசந்திரன், ராபிதாஸ், சுபாஷ் கென்னடி, ஷாஜூ, ஜூடஸ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் ராபின்சன், இன்பராஜ், சிவகுமாா், ஷீஜா, மாவட்ட குழு உறுப்பினா் விஸ்வம்பரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின்தாஸ் ஆகியோா் உரையாற்றினா். மாவட்டச் செயலா் செல்லசாமி சிறப்புரையாற்றினாா்.