சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
மதுரை டவுன்ஹால் பகுதியில் கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. பழைமை வாய்ந்த இந்தக் குளத்தைச் சுற்றி வணிக வளாகக் கட்டடங்கள் உள்ளன. இதனால், தண்ணீா் வரத்து இன்றி தெப்பக்குளம் எப்போதும் வட நிலையில் காணப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளால் தெப்பக்குளத்தின் சுற்றளவும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

இதன்பேரில், வணிக வளாக ஒப்பந்ததாரா்கள், குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் கடைகளை காலி செய்யுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிக்கை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் தங்களது பொருள்களை காலிச் செய்தனா்.
தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் யக்ஞ நாராயணன், கோயில் செயல் அலுவலா் பிரதீபா, பேஷ்காா் இந்திரராஜன், வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த 108 கடைகளை திங்கள்கிழமை அகற்றினா்.