செய்திகள் :

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

post image

நமது சிறப்பு நிருபர்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின்

"ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்து செலுத்தப்பட்ட ட்ரோன்களை நடுவானிலேயே வெற்றிகரமாக அழித்தது. இதன்மூலம் இந்திய மண்ணில் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்கள் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாபின் பதான்கோட், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவத் தளவாடப் பகுதிகளில் உள்ளன. ஆனால், தென் மாநிலங்களில் அத்தகைய சாதனங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிலைநிறுத்தப்படவில்லை.

எனவே, கூடுதல் சாதனங்களின் தேவை அவசியமாகியுள்ளது.

ஜம்மு}காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் } இந்தியா இடையே போர்ப் பதற்றம் தீவிரமாக இருந்தது. அந்த நாள்களில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்கள் உதவியுடன், வடக்கு

மற்றும் மேற்கு இந்தியா பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள், அவை இலக்கை அடையும் முன்பாகவே அழிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் இந்தச் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டிருக்காவிட்டால் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிருதசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டீகர், நல், பலோடி, உத்தரலாய், புஜ் ஆகிய இடங்களில்

ராணுவ நிலைகளும், பொதுமக்கள் வாழும் பகுதிகளும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கக்கூடும்.

சுதர்சன சக்கரம்: இந்த எஸ்400 வான் பாதுôப்பு சாதனம், சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு என்று இந்திய பாதுகாப்புப் படைகளால் அழைக்கப்படுகிறது. அடிப்படையில் இது ராடார் அமைப்பைக் கொண்டுள்ள ஏவுகணை தடுப்பு சாதனமாகும். 600 கி.மீ. தொலைவில் இருந்து எதிரியால் ஏவப்படும் இலக்குகளைக் கண்காணிக்கவும், 400 கி.மீ. வரையிலான அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் இதனால் முடியும்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியது: எதிரி அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டவுடன், கட்டளை மையம் எனப்படும் கமாண்ட் சென்டரில் இருந்து அச்சுறுத்தலுக்குத் தக்கவாறு உரிய ஏவுகணையைத் தேர்ந்தெடுத்து, அதை எஸ் 400 தரையில் இருந்து வானுக்கு அனுப்பி, வான் பகுதியிலேயே எதிரி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கிறது.

தொழில்நுட்பக் கலவை: எஸ்400 சாதனம் ஹோமிங் தொழில்நுட்பக் கலவையைக் கொண்டுள்ளது. அதாவது, பின்தொடர்வது, செலுத்திய பிறகு வழிகாட்டுவது, ஜிபிஎஸ் மூலம் இலக்கை அடைவது, கட்டளை மையத்தில் இருந்து மனிதர்களாலும் இயக்குதல் என ஒரே நேரத்தில் பல கலவை தொழில்நுட்பத்தை ஒருசேரப்

பெற்றுள்ளது.

400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அடையக்கூடிய 40என்6, 250 கி.மீ. தொலைவில் தாக்குதலில் ஈடுபடும் 48என்6டிஎம், 120 கி.மீ. வரை வேக வரம்பைக் கொண்ட போர் விமானங்கள் மற்றும் துல்லிய - வழிகாட்டப்பட்ட வெடிமருந்துப் பொருள்களுடன் வேகமாக நகரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து இதனால் அழிக்க முடியும்.

மேலும், உயரே பறந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் எஸ்400 சாதனத்தால் அழிக்க முடியும். இவற்றைக் கொள்முதல் செய்வதற்கு ரஷிய அரசின்

அனுமதி கிடைக்கப் பெற்றதும் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் க... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை ச... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏ... மேலும் பார்க்க