கூலி, ரெட்ரோ, குட் பேட் அக்லி... களைகட்டும் 2025 கோடை!
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. தற்போது, ஜெய்ப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ரெட்ரோ - வாய் பேச முடியாதவராக நடித்த பூஜா ஹெக்டே?
இந்த இரு படங்களும் கோடை வெளியீடாகத் திரைக்கு வர உள்ள நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு திட்டமிடப்பட்ட நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படமும் 2025 கோடை வெளியீடாக மே 1 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படமும் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இதனால், அடுத்தாண்டு கோடை விருந்தாக மாறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.