செய்திகள் :

கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்!

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இடையே இம்முறை கடுமையான போட்டி நிலவியது. 20ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜ.க சார்பாக தமிழ் செல்வம் போட்டியிட்டார்.

மகாவிகாஷ் அகாடி சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணேஷ் குமார் போட்டியிட்டார். இத்தேர்தல் வழக்கத்தை விட அனைவர் மத்தியிலும் கடுமையான எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஏற்கனவே தமிழ் செல்வம் இரண்டு முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார் என்ற ஒரு பெருமை இருந்தது. அதற்கும் மேலாக தமிழர்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் விளங்கிய முன்னாள் கவுன்சிலர் ரவி ராஜா திடீரென பா.ஜ.க வில் சேர்ந்து தமிழ் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தார். இதனால் தமிழ் செல்வத்தின் வெற்றி எளிதாக முடிந்தது.

மும்பை அரோரா தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த நம்பிராஜன் மகனான கணேஷ் குமார் கடந்த முறையும் தமிழ் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

கணேஷ் குமார்1

இம்முறையும் அதே போன்று இத்தொகுதியில் தோல்வியையே சந்தித்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவின் ஆதரவு தமிழ் செல்வத்திற்கு இருந்தது. ஆனால இப்போது சிவசேனா உடைந்துவிட்டது. இதில் உத்தவ் தாக்கரே அணி காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. எனவே எப்படியும் மராத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுவிட முடியும் என்று கணேஷ் குமார் நம்பினார். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. தமிழ் செல்வம் மூன்றாவது முறையாக சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் தமிழ் செல்வம் வெற்றி பெற்று இருக்கிறார்.

தமிழ் செல்வம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க தமிழக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உட்பட தலைவர்கள் வந்து தீவிர பிரசாரம் செய்தனர். இத்தேர்தல் வெற்றி குறித்து கேப்டன் தமிழ் செல்வத்திடம் பேசியபோது, ``மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது. எப்போதும் அவர்களுடன் இருந்து அவர்களுக்காக பாடுபடுவேன்''என்று தெரிவித்தார்.

இதேபோன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதி கெய்க்வாட் வெற்றி பெற்றார். ஏற்கனவே கடந்த முறை நடந்த தேர்தலில் ஜோதியின் சகோதரி வர்ஷா கெய்க்வாட் வெற்றி பெற்றிருந்தார். தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கொடுக்க இவர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

மகாராஷ்டிரா: புதிய முதல்வர் ஷிண்டேயா... பட்னாவிஸா?! - `மஹாயுதி’ கூட்டணியின் கணக்கு என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராவாரா அல்லது தேவேந்திர பட... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 4: `விண்வெளியும் என் வழியே..!’ | SPACE X

பேபலில் இருந்து வெளியேற்றப்படும் போதே, எலான் மஸ்குக்கு விண்வெளி மீதான காதல் அதிகரித்திருந்தது. 2001லேயே “மார்ஸ் சொசைட்டி” உடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் செடி கொடிகள் வளர்வதற்கான செயற்கை அறைகளை நிறுவ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் டு டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வரை..! - நீங்க ரெடியா?

அதானி மீதான அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு, இலங்கை புதிய பிரதமர், ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர் . ரஹ்மான், அர்ஜென்டினா கால்பந்து இந்தியா வரும் அறிவிப்பு என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: சறுக்கிய சரத்பவார்; பாராமதி கோட்டையைத் தக்க வைக்கும் அஜித்பவார்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இப்போட்டி அதிக அளவில் மேற்கு மகாராஷ்டிராவிலிருந்தது. இதனால் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளு... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!

இந்திய ரயில்வே துறை தினமும் சுமார் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. பயணிகள் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்ய ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் ச... மேலும் பார்க்க

''உணவு மூலமாகவே கேன்சரை வென்றுவிட்டாள் என் மனைவி'' - முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து!

முன்னாள் கிரிக்கெட் வீரர் 'நவ்ஜோத் சிங் சித்து', தன்னுடைய மனைவி நவ்ஜத் கவுர் கேன்சர் நான்காவது நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை உணர்ச்சிப்பெருக்குடன் சொல்கிற வீடியோதான் தற்போது வைரலாகிக் ... மேலும் பார்க்க