செய்திகள் :

கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை

post image

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் புறநகர் பகுதியில் கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் உதவி ஆணையர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் 12 விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம், வெளியாட்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடர்ச்சி மலை வன... மேலும் பார்க்க

அயனாவரத்தில் ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (பிப். 27) பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆப... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு

கோயம்புத்தூர்: மகா சிவராத்திரி ஜாதி, மதம், பாலின பாகுபாடு மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி உலகளாவிய பண்டிகையாக பரிணமித்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். கோவை ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக் கொள்கையை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை! - அன்புமணி

மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மக்கள்தொகையை குறைக்க வேண்டும் ... மேலும் பார்க்க