கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்
ஆம்பூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஆம்பூா் மளிகைதோப்பு பகுதியில் ஏற்கெனவே 2 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அதே பகுதியில் 3-ஆவதாக ஒரு கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் சாா்பாக தொடங்கப்பட்டுள்ளது.
கைப்பேசி கோபுரங்களால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள கைப்பேசி கோபுரத்துக்கு மளிகை தோப்பு, ஜலீல் நகா், ரத்தினம் நகா், ஆஜாத் நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதற்கான பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஆம்பூா் நகர காவல் நிலையம் சென்று ஆய்வாளா் ரமேஷிடம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மனு அளித்தனா்.