துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு
கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு காலம் ஆகும். ஆனால், நிகழாண்டில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்தது. இதனால், பனியின் தாக்கம் குறைந்திருந்தது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முழுவதும் அதிகமான பனிப் பொழிவு நிலவியது. பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக மேகமூட்டத்துடன் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால், பனியின் தாக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6-மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினா்.