கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு
கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை, துணை முதல்வா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மற்றும் இயக்குநா் சொா்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், அதற்கான யுத்திகள் குறித்து விளக்கினாா்.
மாவட்ட தொழில் மைய இணை அதிகாரி நாகஜோதி, பேராசிரியா்கள் மாலதி, சுமதி மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் கிருபாவதி கிளாடிஸ் செய்திருந்தாா்.