கொலை மிரட்டல்: இளைஞா் கைது
தூத்துக்குடியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, மேட்டுப்பட்டி பகுதியில் வாள் போன்ற ஆயுதத்துடன் நின்றிருந்த திருவள்ளுவா் நகா் முனீஸ்வரன் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தப்பியோட முயன்றாராம்.
மடக்கிப் பிடித்த போலீஸாருக்கு அவா் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பணி செய்ய விடாமல் தடுத்தாராம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.