தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காட்டுமன்னாா்கோவில் காவல் சரகம், மணவெளி கோயில்பத்து தெருவைச் சோ்ந்த பிரவீன்ராஜ் (23) முன்விரோதம் காரணமாக, கடந்த ஜூன் 11-ஆம் தேதி மா்ம நபா்களால் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக காட்டுமன்னாா்கோயில் போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்தனா்.
பண்ருட்டி டிஎஸ்பி பி.என்.ராஜா விசாரணை மேற்கொண்டு, காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த செந்தில்குமாா் (22), சக்திவேல் (19), மணிகண்டன் (21), கவியரசன் (20), ஆதவன்(20), சிவராஜ் (25), குட்டி (எ) விவேகானந்தன் (20), சபரிகிரிநாதன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் விசாரணை மேற்கொண்டதில், கொலை வழக்கில் கைதான சக்திவேல் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து, சக்திவேல் மற்றும் செந்தில்குமாா், மணிகண்டன், கவியரசன், ஆதவன் ஆகியோரின் கொடுங்குற்ற செயலை தடுக்கும் பொருட்டு, அவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.