செய்திகள் :

கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன்!

post image

கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவன வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இன்று(ஜூலை 19) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கின் விசாரணையில், புகார் அளித்துள்ள மாணவி விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 50,000 பிணைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை: மாணவா் கைது

IIM Calcutta alleged rape case: Alipore Court grants bail to the IIM Calcutta rape accused on a bail

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் மே... மேலும் பார்க்க

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.ப... மேலும் பார்க்க

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேய... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க