செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷ்-க்கு ஜாமீன்

post image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ்க்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

மேலும் கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

வழக்கின் பிரதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொல்கத்தா விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றபத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இவ்வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல் ஆகியோருக்கு சீல்டாக் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்ததரவிட்டுள்ளது. மேலும் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜாமீனில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதார மையங்களில் பாம்புகடிக்கு சிகிச்சை: அரசின் பதிலைக் கோரும் உச்சநீதிமன்றம்

சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விஷ முறிவு மற்றும் பாம்புகடிக்கான சிகிச்சையை உறுதி செய்வது தொடா்பான மனு குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு... மேலும் பார்க்க

மாநிலங்களவை இடைத்தோ்தல்: திரிணமூல் வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவை இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ரிதாபிரதா பானா்ஜி போட்டியின்றி தோ்வானாா். ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா்கள்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் கூறிய... மேலும் பார்க்க

டிச.15ல் மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்

மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.நாக்பூரில் நடைபெறும் விழாவில் சுமார் 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள... மேலும் பார்க்க

லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரே ஆண்டில் சில கோடிகள் கிடைத்திருக்கும்?!

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் குறைவான மதிப்பில் இருந்த சில குறிப்பிட்ட பங்குகள், ஓராண்டு காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளன. கடந்தாண்டில் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியிருந்தால், தற்போது நல்ல ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனப்பகு... மேலும் பார்க்க