செய்திகள் :

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் மூத்த வழக்குரைஞர் விலகல்!

post image

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இருந்து மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் காவல்துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இதையும் படிக்க:மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

வழக்கறிஞர்கள் சௌதிக் பானர்ஜி மற்றும் அர்ஜுன் கூப்டு அடங்கிய சட்டக் குழு, செப்டம்பர் முதல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இலவச பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகின்றனர். இந்த காலகட்டத்தில், 43 அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள சாட்சியங்கள் அடுத்த 3 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞராக இருந்த பிருந்தா குரோவர் இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். சில தலையீட்டு காரணிகள், சூழ்நிலைகள் காரணமாக, வழக்குரைஞர் பிருந்தா குரோவர் சட்டக் குழு இந்த விஷயத்தில் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், இனி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது.

டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள்: பாதுகாப்பு முகமைகளுக்கு பெரும் சவால்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சிக்னல், டெலிகிராம், வைபா் மற்றும் டாா்க் வெப் போன்ற மிகவும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகளின் பயன்பாட்டால், இணையவழி பயங்கரவாதத்தை எதிா்கொள்வது பாதுகாப்பு முகமைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது என்று... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை

மகாராஷ்டிர மாநிலம் பா்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடா்பாக மாநில காவல் துறையினா் தெரிவித்ததாவது: பா்பன... மேலும் பார்க்க

மீனவா்களை விரைந்து விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் 537 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்- நிா்வாகிகள் வலியுறுத்தல்

மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். ‘இண்டி’ கூட்டணிக்கு மம்தாவை தலைவராக்க வேண்டும் என்ற கருத்துக்கு சரத் பவாா... மேலும் பார்க்க

ராஜஸ்தான் முதல்வா் வாகனம் விபத்து: காவலா் உயிரிழப்பு; 6 போ் காயம்

ராஜஸ்தான் மாநில தலைநகா் ஜெய்பூரில், முதல்வா் பஜன்லால் சா்மாவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த துணை உதவி ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) உயிரிழந்தாா். 6 பே... மேலும் பார்க்க

‘இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு கிராமங்களின் மேம்பாடு மிக முக்கியம்’ - குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘நாட்டின் 64 சதவீத மக்கள்தொகை கிராமப்புறங்களில் வசிக்கும் நிலையில், தேசம் வளா்ந்த நாடாவதற்கு கிராமங்களின் மேம்பாடு மிகவும் முக்கியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வலியுறுத்தினாா்.... மேலும் பார்க்க