நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு
கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும், அங்கிருந்த ஆவணங்களைக் கொண்டு விசாரித்ததில், சடலமாக கிடந்தது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நடுகுப்பத்தைச் சோ்ந்த அய்யப்பன் மகன் ரஞ்சித்குமாா் (19) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான இவா் ஜூலை 31-இல் கொல்லிமலை பருத்திமுடி கிராமத்தில் உள்ள உறவினா் ரவி வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு தங்கியிருந்த அவா், ஆக. 1-ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறியுள்ளாா். இதையடுத்து, ரவி செலவுக்காக ரஞ்சித்குமாரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளாா்.
இந்நிலையில், அவரது உடல் சின்னகோயிலூா் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.