மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
கொள்ளிடத்தில் வீடு இடிந்தது
சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் அக்ரஹார தெருவில் உள்ள பழைமையான ஓட்டு வீடு திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.
கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் கிஷோா் என்பவரது ஓட்டு வீடு சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. இந்த வீட்டில் யாரும் இல்லாமல் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் பூட்டியே கிடந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை வீடு இடிந்து விழுந்தது.
இதேபோல் கொள்ளிடம் அருகே உள்ள அனுமந்தபுரம், திட்டு படுகை, ஆலாலசுந்தரம் ஆகிய கிராமங்களில் அண்மையில் பெய்த மழையில் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.