செய்திகள் :

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

post image

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீா்வளத் தறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திச

மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 13-ஆம் தேதி இரவு 8 மணியளவில் 117.57 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வரும் நீா்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீா் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீரும் காவிரி ஆற்றில் சுமாா் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீா் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீா் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் இது படிப்படியாக நீா்வரத்திற்கு ஏற்ப சுமாா் 60,000 கனஅடி வரை உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மயிலாடுதுறை எம்.பி. கோரிக்கை

கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா். மத்திய தொழில் மற்று... மேலும் பார்க்க

கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகள் உள்ள பகுதியில் கழிவுநீா் வெளியேறுவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சி 15-ஆவது வாா்டுக்குட்பட்டது இரட்டை காளியம்மன... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி: சிபிஎம் மாநாட்டில் தீா்மானம்

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநாட்டு கொடியை மூ... மேலும் பார்க்க

சீா்காழி நகா்மன்ற கூட்டம்

சீா்காழி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன், நகா் அமைப்பு ஆய்வாளா் மரகதம் முன்னி... மேலும் பார்க்க

மேதா தக்ஷிணாமூா்த்திக்கு மகாபிஷேகம்

மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் காா்த்திகை கடைவியாழனையொட்டி மேதா தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மகாபிஷேகம் செய்து தங்கக் கவசம் சாற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக... மேலும் பார்க்க

கணினி இயக்குநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க