கோடியக்கரையில் உள்வாங்கிய கடல்!
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் சனிக்கிழமை மாலை திடீரென உள்வாங்கி குளம்போல் அமைதியாகக் காணப்பட்டது.
வங்கக் கடலில் கடந்த வாரத்தில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழைப் பொழிவு நீடித்தது.
இதனிடையே, தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவும், தமிழகத்தில் மீண்டும் மழை தொடரவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
விவசாயிகளை பாகிஸ்தானிலிருந்து நுழைந்தவர்களைப் போல நடத்துவதா? காங். கேள்வி
இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வடக்கு திசையில் இருந்து கடலை நோக்கி தரைக்காற்று சற்று பலமாக வீசியது.
இதனால் மாலையில், கோடியக்கரை கடல் பரப்பு உள்வாங்கி, தரைப்பகுதியில் அமைந்த நீர்நிலைகளைப் போல அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.