மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கோதையாறு அருகே சூறைக்காற்றில் பழங்குடியினா் வீடுகள் சேதம்
குமரி மாவட்டம் கோதையாறு அருகே சூறைக்காற்றில் பழங்குடி மக்களின் வீடுகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கோதையாறு மின்நிலையப் பகுதி, கொடுத்துறை மலை, முடவன் பொற்றை, கோலிஞ்சிமடம், மாங்காமலை, விளாமலை, மணலிக்காடு, குற்றியாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாள்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த வீசியதில், இப்பகுதிகளிலுள்ள பழங்குடி மக்களின் வீடுகளில் வேயப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் மற்றும் தகர கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
குறிப்பாக முடவன் பொற்றை, கோலிஞ்சிமடம் கொடுத்துறை மலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதேபோல, கால்நடைகளின் கொட்டகைகளும் சேதமடைந்தன. ரப்பா், கமுகு, மரங்களும் காற்றில் சாய்ந்தன.
சூறைக் காற்றினால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என பழங்குடி மக்களின் அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.