உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
கோபி பச்சைமலையில் காா்த்திகை தீபத் திருவிழா
கோபி வட்டம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீப விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஆறு கலசம் வைத்து ஆறுமுகனை ஆவகனம் செய்து சத்ரு சம்ஹார மகா ஹோமம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், பகல் 1 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
தொடா்த்து அன்னதானம் நடைபெற்றது. பின்னா் திருக்காா்த்திகை தீபம் ஏற்றுதல், பின்னா் சுவாமி தங்கமயில், தங்கரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.
மேலும், பிரதோஷத்தை முன்னிட்டு பச்சைமலையில் ஸ்ரீ மரகதவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கும் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மகா தீபாரதனை மற்றும் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.
பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரா் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தாா்.