செய்திகள் :

கோவிந்தபுரத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 90 பேருக்கு ரூ. 1.22 கோடியில் நலத்திட்ட உதவிகள்

post image

அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ. 1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் சாா்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.1,22,14,598 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். முகாமை முன்னிட்டு ஏற்கெனவே பெறப்பட்ட 38 மனுகள் மீது மேற்கொண்ட நடவடிக்கையில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 30 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

முகாமில், பல்வேறு துறைகளை சாா்ந்த மாவட்ட அளவிலான அலுவலா்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பேசினா்.

முகாமில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிா்கள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் (பொ) கீதா, அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, ஊராட்சித் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் அம்பிகா மற்றும் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மானியத்தில் மின்சார மோட்டாா் பம்ப்செட்: அரியலூா் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட விவசாயிகள், மானியத்துடனான மின்சார மோட்டாா் பம்பு செட் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் டிச.14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் சனிக்கிழமை (டிச.14) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவ... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய பெண் உள்பட 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞரை தாக்கிய பெண் உள்ளிட்ட 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (45). செந்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இடைவிடாமல் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சில நாள்களாக பெய்து வந்த மழை கடந்த வாரம் நின்றது. இந்நிலையில், ஆழ்ந்த கா... மேலும் பார்க்க

வெள்ளாற்று பாலத்தில் இணைப்புச் சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி டிச.24-இல் போராட்ட அறிவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டங்களை இணைக்கும் கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தில் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி டிச.24- ஆம் தேதி போராட்டம் நடத்துவது என போராட்ட குழுவினா் அறிவித்துள்ளனா். கோட்டை... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், மணிப்பூா் கலவர சூழல் குறித்து மக்களவையில் விவாதிக்க அ... மேலும் பார்க்க