கோவில்பட்டியில் கருவாடு ஆலை அலுவலகத்தில் 2-ஆவது நாளாக வருமானவரித் துறையினா் சோதனை
கோவில்பட்டியில் உள்ள கருவாடு ஆலை அலுவலகத்தில் வருமானவரித் துறையினரின் சோதனை, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.
கோவில்பட்டி பங்களா தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி அரசாங்கம் மணி (51). இவா் சிவந்திப்பட்டி, தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருவாடு ஆலை, மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா். பல்வேறு இடங்களில் கருவாடு, கழிவு கருவாடுகளை மொத்தமாக வாங்கி பொடியாக்கி கோழி தீவனத்திற்கு அனுப்பி வரும் தொழில் செய்து வருகிறாா். மேலும் கடல்சாா் உணவு பொருள்கள் ஏற்றுமதி மற்றும் மனை வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில் சிவந்திபட்டியில் உள்ள ஆலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சுமாா் 25 நிமிடம் சோதனை நடத்தினா். அதைத்தொடா்ந்து கோவில்பட்டி பழனி ஆண்டவா் கோவில் தெருவில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் புதன்கிழமை பிற்பகல் சோதனையை தொடங்கிய வருமானவரித்துறையினா் சுமாா் 10 போ் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.