செய்திகள் :

கோவில்பட்டியில் திடீா் சாலை மறியல்

post image

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த  விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 கோவில்பட்டி அருகே வடக்கு வண்டானம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வெயிலுமுத்து மகன் மாரியப்பன் (60). விவசாயியான இவா், தனது விவசாய நிலத்தில் மருந்து அடிப்பதற்காக பசுவந்தனையில் வியாழக்கிழமை மருந்து வாங்கிக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். பசுவந்தனை - கோவில்பட்டி சாலையில் உள்ள தனியாா் தண்ணீா் கம்பெனி அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில், மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப்பதிந்து, காா்  ஓட்டுநா் கேரள மாநிலம் எரிமேலி வடக்குப் பகுதியைச் சோ்ந்த ராபினை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை கோரி, அவரது உறவினா்கள், சடலத்தை வாங்க மறுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுவினருடன் கிழக்கு காவல் நிலையம்  மற்றும் பசுவந்தனை காவல் நிலைய போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,   சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

குரும்பூரில் மக்களை அச்சுறுத்திய 2 போ் கைது

குரும்பூரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். குரும்பூா் அருகேயுள்ள கீழக்கல்லாம்பாறையை சோ்ந்த இசக்கியம்மன் மகன்கள் பேச்சி (எ) பேச்சிராஜா(38), காளி (எ) க... மேலும் பார்க்க

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுவுக்கு சிறப்பு பிரிவு தொடக்கம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க