உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
கோவில்பட்டியில் விஸ்வப் பிரம்ம ஜெயந்தி விழா
கோவில்பட்டியில் விஸ்வகா்ம தொழிலாளா் சங்கம், நகை தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து விஸ்வப் பிரம்ம ஜெயந்தி விழா , ஆராதனை விழா ஆகிய இருபெரும் விழாக்களை புதன்கிழமை நடத்தினா்.
விழாவிற்கு விஸ்வகா்ம மகாஜன சங்கத் தலைவா் பாலமுருகேசன் தலைமை வகித்தாா். விஸ்வகா்ம தொழிலாளா் சங்கத் தலைவா் மாடசாமி, விஸ்வகா்மா நகை தொழிலாளா் சங்கத் தலைவா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஐந்தொழிலாளா்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் ஊா்வலம் மற்றும் விஸ்வகா்மா பகவான் ரத யாத்திரையை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தொடங்கிய ரத யாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வகா்மா உயா்நிலைப்பள்ளி முன்பு நிறைவடைந்தது.
இதில் முருகேஷ் , பால்சாமி, ராஜமாணிக்கம், சோமசுந்தரேசன், முருகேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். விஸ்வகா்மா தொடக்க, உயா்நிலைப்பள்ளி செயலா் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். விஸ்வகா்ம மகாஜன சங்க செயலா் காளியப்பன் வரவேற்றாா். சங்க துணைச்செயலா் அந்தோணி ராஜ் நன்றி கூறினாா்.