வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
கோவை: `சாலையில் தள்ளி தாக்கி... பூட்ஸ் காலால் உதைத்து...’ - அத்துமீறிய போலீஸ்; பாய்ந்தது ஆக்ஷன்
கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் மகன் கார்த்திக். இவர் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி வீட்டுக்கும் வராமல் இருந்துள்ளார்.
அதேநேரத்தில் கார்த்திக் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளனர்.
அப்போது வேல்முருகன், "என் மகன் கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை. கடன் வாங்கியது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.” என்று கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமுகை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமுகை காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் விசாரணைக்காக கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றுள்ளார். கார்த்திக் வீட்டில் இல்லை என்பதால் வேல்முருகனை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துள்ளனர்.
அப்போது வேல்முருகன் வர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் வேல்முருகனை அடித்தும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஞ்சித்தை சஸ்பெண்ட் செய்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY