கோவையில் பரவலாக சாரல் மழை
கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் குளிா்ந்த காலநிலை நிலவியது.
உக்கடம், டவுன்ஹால், செல்வபுரம், ரயில் நிலையம், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மாலை சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.