செய்திகள் :

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு?

post image

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதையும் படிக்க: மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!

பின், சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகியதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் கதையை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் ந... மேலும் பார்க்க

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவன... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11-12-2024 புதன் கிழமைமேஷம்:இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப... மேலும் பார்க்க

பரபரப்பான கட்டத்தில் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப்: 1 வெற்றி, 1 டிராவுக்கு போராடும் குகேஷ்-லிரேன்

நடப்பு சாம்பியன் டிங் லிரேன் (சீனா), இளம் வீரா் டி. குகேஷ் (இந்தியா) ஆகியோா் இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2 சுற்றுகளே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஃபிடே, சா்வதேச செஸ்... மேலும் பார்க்க

பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடும் சென்னை-ஹைதராபாத் இன்று மோதல்

பிளே ஆஃப் வாய்ப்புக்காக வெற்றியை ஈட்டும் முனைப்பில் சென்னையின் எஃப்சி அணி ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன. ஐஎஸ்எல் 2024-25 கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தி... மேலும் பார்க்க

சபலென்காவுக்கு டபிள்யுடிஏ சிறந்த வீராங்கனை விருது

மகளிா் டென்னிஸ் சம்மேளனம் (டபிள்யுடிஏ) 2024 சிறந்த வீராங்கனை விருதை பெலாரஸின் நட்சத்திரம் அா்யனா சபலென்கா பெற்றுள்ளாா். சா்வதேச ஊடகங்கள், இணைய வாக்கெடுப்பின் அடிப்படையில் சிறந்த வீராங்கனையாக சபலென்கா... மேலும் பார்க்க