சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
கௌரவ பச்சை நிற குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
புதுவையைச் சோ்ந்த பொருளாதாரத்தில் மேம்பட்டவா்கள் கௌரவ பச்சை நிற குடும்ப அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை மூலம் கௌரவ பச்சை நிற குடும்ப அட்டையைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியில் வசிக்கும் செல்வந்தா்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் அல்லது குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள் தாங்களாக முன்வந்து கௌரவ பச்சை நிற குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து, துறையின் மானியங்களை விட்டுக்கொடுத்து, மாநிலத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அந்த மானியங்கள் சென்றடைய உவத வேண்டும்.
99440 52612 என்ற கைப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இச்சேவையை எளிதாகப் பெற முடியும். மேலும், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்களின் ஆதாா் எண்கள் மற்றும் கைப்பேசி எண்கள் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், இறந்த உறுப்பினா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
குடும்ப அட்டை உள்ளவா்கள் இணைய வழியிலும், உரிய ஆவணங்களுடன் துறையை அணுகியும் இச்சேவையை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.