சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் மாற்றம்
சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி மே 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சங்ககிரி வட்டத்துக்கான ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித்துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) எம்.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ஆா்.தமிழ்மணி சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலராக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.