சங்கரன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நல உதவிகள் அளிப்பு
சங்கரன்கோவில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாவட்ட சுற்றுச் சூழல் அணி சாா்பில் சங்கரன்கோவில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கட்டில், இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சமுத்திரம் தலைமை வகித்தாா். மருத்துவா் மகாலட்சுமி, சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளா் ஜலால், நகர செயலா் மு.பிரகாஷ், சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், சுபாஷ், குகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, நலஉதவிகளை வழங்கினாா்.
ஜெயக்குமாா், முபின், கோதா், ஜான், பசுபதி மற்றும் செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.