செய்திகள் :

`சங்கி என்றால் மனித குல எதிரி' - போர்க்கொடி தூக்கும் NTK மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்?

post image

`சங்கி என்றால் நண்பன், சக தோழன்` என சீமான் சொன்னதற்கு பா.ஜ.க-வுக்கு எதிரான இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்.பி வேட்பாளரும் மாநில நிர்வாகியுமான ஜெகதீச பாண்டியன் சீமானுக்கு எதிரான எக்ஸ் தளப் பதிவு சர்ச்சையாகியிருக்கிறது.

நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்' என அவர் சொன்ன பதில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கு விளக்கமளித்தவர் `சங்கி’ என்பதற்கு உண்மையிலேயே நண்பன் எனும் பொருளிருக்கிறது. இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்த துளசிதாசர், ராமனுடைய நண்பன் அனுமன் எனக் குறிப்பிடுவதற்கு, ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். ‘சங்கி’ என்றால், ‘பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்’ எனும் பொருளும் பாலி மொழியில் இருக்கிறது. தற்காலச்சூழலில், ‘சங்கி’ என்பதை சங் பரிவார் அமைப்புகளையும், அவர்களோடு உறவு வைத்திருப்பவர்களையும் குறிக்கிற அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.

இராவணப் பாட்டனைப் போற்றிக் கொண்டாடும் நான் சங்கியா?

தொடர்ந்து ``90 விழுக்காடு இந்துக்களின் கட்சி திமுக” எனச் சொல்கிற ஐயா ஸ்டாலின் சனாதன எதிர்ப்பாளர்; “தமிழர்கள் இந்துக்களே இல்லை” எனச் சொல்கிற நான் சங்கியா? திராவிட மாடலின் முன்னோடி ராமர்தான் எனச் சொன்ன அமைச்சர் ரகுபதி சமூக நீதிக்காவலர்; இராவணப் பாட்டனைப் போற்றிக் கொண்டாடும் நான் சங்கியா? பசு மடம் கட்டும் சேகர்பாபு சமத்துவவாதி; மாட்டிறைச்சி உணவுக்காகக் குரலெழுப்பும் நான் சங்கியா? என்ன தர்க்க நியாயமிது?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

சீமான்

ஆனால் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஜெகதீச பாண்டியன் ``சங்கி என்றால் நண்பன்தான் என விளக்கமளித்த பிறகும், தனது எக்ஸ் தளத்தில் சங்கி - தமிழுக்கு எதிரி.. சங்கி-தமிழனுக்கு எதிரி... சங்கி - தமிழ்தேசியத்திற்கு எதிரி.. சங்கி - மனித குல எதிரி” என பதிவிட்டிருப்பது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கும் முன்பிலிருந்தே சீமானுடன் நெருக்கமாக பயணிப்பதும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி எம்.பி வேட்பாளராக போட்டியிட்டதும் குறிப்பிடதக்கது.

`2034-ல் அமலுக்கு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்?’ - மோடி அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன?

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே `ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் குறித்த பா.ஜ.க பேசிவருகிறது. தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க, அந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கான அனை... மேலும் பார்க்க

NTK: ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை... விழித்துக் கொண்டாரா சீமான்?

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் விலகல் தொடர் கதையாகியுள்ள சூழலில், டிசம்பர் 29-ம் தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது, அக்கட்சித் தலைமை. நிர்வ... மேலும் பார்க்க

பிரதமர் வீடு கட்டும் திட்டம்: கட்டாத வீட்டுக்கு வாழ்த்து மடல்; தொழிலாளர் அதிர்ச்சி; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் பந்தலூர், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட இரும்பு பாலம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர் பன்னீர்செல்வம் - மகேஷ்வரி தம்பதியர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்குப் பிரதம... மேலும் பார்க்க

EPFO: ``இனி வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம்'' - எளிமைப்படுத்தும் தொழிலாளர் அமைச்சகம்

இனி வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலமே எடுக்கலாம் என்கிற வசதி விரைவில் வரப்போகிறது என்று தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தவ்ரா சமீபத்தில் அறிவித்துள்ளார். ஓய்வுக்காலத்திற்கு பிறகு, வைப்பு ந... மேலும் பார்க்க

Aadhar Card: 'இன்னும் இரண்டு நாள்களே இலவசம்..!' - ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? | How to?

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் நமது தகவல்களை அப்டேட் செய்வது அவசியம். காரணம், அந்த 10 ஆண்டுகளில் முகத்தோற்றம் முதல் முகவரி வரை மாறியிருக்கலாம். பல இடங்களில் ஆதார் அட்டை அடையாள அட்டையாக செயல்ப... மேலும் பார்க்க

Syria: குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய கிளர்ச்சியாளர்கள் - சிரியா பிரச்னையால் இந்தியாவுக்கு பாதிப்பு?

மத்திய கிழக்கு நாடான சிரியாவை, 53 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அசாத் குடும்பத்தின் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்!அசாத் குடும்ப ஆட்சி:சிரியாவில் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படும் ... மேலும் பார்க்க